திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் அரசுகும் இழப்பு.. விவசாயிகளுக்கும் இழப்பு.. - இபிஎஸ் சாடல்

 
eps

 திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால்  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கும் இழப்பு மற்றும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 11 மாத கால  ஆட்சியில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.  உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாமை, ஆன்லைனில் பதிவு செய்பவர்களிடம் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படும் என்ற கெடுபிடி, மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கமிஷன் என்ற பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன.

திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் அரசுகும் இழப்பு.. விவசாயிகளுக்கும் இழப்பு.. - இபிஎஸ் சாடல்

கடந்த 10 நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தும், நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளன.

rain

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார்கோயில் பகுதிகளில் உள்ள சுமார் 170 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட , சுமார் 70 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாமல், திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தார்பாய் போட்டு மூடாத நிலையில் அம்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளதாக  செய்திகள் வந்துள்ளன. மேலும், மதுரை, திருச்சி  உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் சேதமடைந்துள்ளன.

திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் அரசுகும் இழப்பு.. விவசாயிகளுக்கும் இழப்பு.. - இபிஎஸ் சாடல்
 
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   நாடு முழுவதும் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும், மேலும், நெல் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளிடம் இருந்து கால தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்  அரசை வலியுறுத்துகிறேன். “ என்று குறிப்பிட்டுள்ளார்.