உலகையே மாற்றும் திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி

 
edappadi palanisamy

உலகையே மாற்றும் திறன் கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு கிடைத்திட வழிவகுப்பதுடன், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மனிதம் போற்றி மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்போம், கரம் கொடுப்போம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஐநா சபையால் முன்னெடுக்கப்பட்டது. ”அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தீர்வுகள், அணுகக்கூடிய மற்றும் சமமான உலகத்தைப் படைப்பதில் புதுமையின் பங்கு” என்பதே இந்தாண்டுக்கான கருப்பொருள். இதனிடையே சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

eps

இதனிடையே தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 
முடங்கிவிட மாட்டோம், முயன்று கொண்டே இருப்போம்" என்று வாழ்வில் பலவற்றில்  சாதிக்கும், உலகையே மாற்றும் திறன் கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு கிடைத்திட வழிவகுப்பதுடன், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மனிதம் போற்றி மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்போம், கரம் கொடுப்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.