ஆதின விவகாரங்களில் தமிழக அரசு மூக்கை நுழைக்க முயற்சிக்கிறது - இபிஎஸ் குற்றச்சாட்டு..

 
 எடப்பாடி பழனிசாமி!

மத விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது,என்றும்,  ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  

மயிலாடுதுறையில் இன்று அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரம் ஆதீனத்தைச் சந்தித்து ஆசி பெற்றார்.  அப்போது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர், எபிஎஸுக்கு  ஆசிகள் வழங்கி பிரசாதம் வழங்கினார்.

இபிஎஸ் - தருமபுரம் ஆதீனம்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இபிஎஸ், அதிமுக அரசு தான் மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியது என்றும்,  அ.தி.மு.க. ஆட்சியில் தான் டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது என்றும் கூறினார்.  டெல்டா பாசன விவசாயிகளுக்கு வெள்ள காலங்களிலும், வறட்சிக் காலங்களிலும்  அதிமுக அரசு நிவாரணமும், இழப்பீடும் வழங்கியதாகவும், இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகளவு இழப்பீட்டுத் தொகை வழங்கிய அரசும் அதிமுக தான் என்றும் தெரிவித்தார்.  

எகிற நினைத்த மா.செ.க்கள் -ஒதுங்கிக்கொண்ட இபிஎஸ்

எம் மதத்தையும் சம்மதம் என்று பார்க்க வேண்டும் எனவும், ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் வழிமுறைகளை நாம் தலையிடக் கூடாது என்றும் கூறினார். ஆதீன விவகாரங்களில் திட்டமிட்டு திமுக அரசு மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறிய அவர், சுமார் 500 ஆண்டுகாலம் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், ஆனால் தற்போது மட்டும் அதனை நிறுத்த திமுக அரசு முயல்கிறது என்று குற்றம் சாட்டினார்.  மேலும்  யார் தவறு செய்தாலும் அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார் என்றார்.  தொடர்ந்து பேசிய அவர்,   சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.