அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார் ஈபிஎஸ்

 
“முதல்வர் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாரா?” – கேட்கும் எடப்பாடி மக்கள்! #edappadi

ஜூலை 11ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்பதால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கபட்டதும் செல்லும் என்று முடிவாகியுள்ளது.

edappadi palanisamy

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இரண்டு நீதிபதிகள் அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 11-ஆம் ஆண்டில் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்த நிலையில் இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

ep

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று சுந்தர் மோகன் மற்றும் துரைசாமி ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் இதன் மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும்  முடிவாகியுள்ளது.

tn

இதன் மூலம் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொது குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லும். அதன்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வாயிலில் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்றும் முழக்கமிட்டனர்.