அதிமுக தலைமை அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த இபிஎஸ்..

 
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த இபிஎஸ்..


சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு  வருகை தந்துள்ள  எடப்பாடி பழனிசாமி,  கலவர சம்பவத்தின்போது சேதமான அறைகளை  பார்வையிட்டு வருகிறார்.

கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது . அதே தினத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.    பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்  சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ,  அதிமுக அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்து சென்று விட்டதாக புகார் அளித்தார்.  

admk office

மேலும், இதுகுறித்து   உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று  கூறி சென்னை உயர்நீதிமன்றத்திலும்  வழக்கு தொடர்ந்தார். அதிமுக அலுவலகம் மோதல் ,கலவரம் ,ஆவணங்கள் ,சொத்துக்கள் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.   இதை தொடர்ந்து இந்த வழக்குகளை  சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 2 முறை அதிமுக அலுவலகம் சென்று அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது காணாமல் போனதாக சொல்லப்பட்ட வாள் , அலுவலகத்திற்குள்ளேயே இருப்பதாக தெரிவித்தனர்.

admk office attack

 இந்நிலையில் இன்று ,  அதிமுக அலுவலக கலவரத்தில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக்வும்,  113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.   இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில்  நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , இன்று அதிமுக அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.  அப்போது இபிஎஸுக்கு , அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

 இதனைத்தொடர்ந்து  அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும்,  அதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும் வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கலவரத்திற்கு பிறகு இந்தமாதம், கடந்த 8 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார். தற்போது 2வது முறையாக அவர் தலைமைக் கழகத்திற்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.