அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

 
ep

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.  

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த வழக்கு நிறுவையில் உள்ளது. இதனையடுத்து அதிமுகவில் இரண்டு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார். 
 
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதை பொறுத்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும், நாடாளுமன்ற  தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.