புழல் சிறையில் ஜெயக்குமார் உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!!

 
TN

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ராயபுரம் 49வது வார்டில் கள்ளஓட்டு போட்டதாக கூறி  திமுக நிர்வாகி ஒருவரை அடித்து அரை நிர்வாணமாக இழுத்து சென்ற காட்சி இணையத்தில் வைரல் ஆனது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.  ஜெயக்குமார் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  

tn

இதைத்தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் மீது 2வது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதன்படி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு  தள்ளிவைத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

jayakumar

இந்த சூழலில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஜெயக்குமாரை சந்திக்க புழல் சிறைக்கு சென்று உள்ளார் , அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உடன் சென்றுள்ளார். பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் ஜெயக்குமார் உடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விரைவில் ஜெயக்குமாரை விடுவிக்க கட்சி சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சந்திப்பின் போது பேசப்படும் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.