மகாகவி பாரதியாரின் புகழையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி

 
edappadi palanisamy

முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில், மகாகவி பாரதியார் அவர்களின் 141 - வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதேபோல், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். 


இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே" என்று பாடிய புரட்சியாளர், 'யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்!' என அஞ்சா நெறி வழிதொட்டு முண்டாசுக் கவிஞர் #மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.