நிதியே இல்லை! பேனா சின்னம் அவசியமா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

 
eps

தமிழக அரசிடம் போதுமான நிதியே இல்லை எனும்போது கருணாநிதிக்கு பேனா சின்னம் அவசியம் தானா என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவாக அவரது நினைவிடம் அருகே மெரினா கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா சின்னம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசிடம் போதுமான நிதியே இல்லை எனும்போது கருணாநிதிக்கு பேனா சின்னம் அவசியம் தானா என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, என ஆட்சிக்கு வந்து திமுக செய்த சாதனைகள் இவை மட்டுமே. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பதிலாக, ரூ.80 கோடியில் தமிழக மக்கள் அனைவரும் பேனா வாங்கிக் கொடுத்துவிடலாம். கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாத உதவித்தொகை போன்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.