கட்சியில் மீண்டும் ஓங்கும் எடப்பாடி செல்வாக்கு - தொண்டர்கள் ஆரவாரம்!!

 
tn

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்து இருந்தார்.  இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.  இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

tn

அதில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொது குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நீதிபதிகள் தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்கிறார். சட்டவிதிகளின்படியே பொதுக்குழு கூட்டப்பட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுள்ளது. அத்துடன் ஒற்றை தலைமை என்று தொண்டர்களின் விருப்பத்தை நீதிமன்றம் ஏற்றுள்ளது. இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தற்போது இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

tn

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து அதிமுக யார் பக்கம் என்று சொல்ல முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். தீர்ப்பு ஓபிஎஸ் பின்னடைவாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.