"மாணவர்கள் தான் மாநிலத்தின் அறிவு சொத்துக்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

 
tn

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

இந்நிலையில் "கல்லூரிக் கனவு" நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிய போது, கடந்த சில நாட்களாக காய்ச்சலால் சோர்வாக இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி புத்துணர்வு அளிக்கிறது.  முதல்வராக வரவில்லை சொந்தப் பிள்ளைகளாக  எண்ணி உங்களை வாழ்த்த வந்துள்ளேன். மாணவர்கள் தான் மாநிலத்தின் அறிவு சொத்துக்கள். அரசுப் பள்ளியில் படித்து உயர்ந்தவர் அப்துல் கலாம் . படித்தோம், வேலையில் சேர்ந்தோம், சம்பாதித்தோம் என இருந்துவிட கூடாது . எத்தகைய ஆற்றலோடு செயல்படுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 30 தமிழகத்தில் தான் இருக்கும்

tn
தமிழகம் மற்ற மாநிலங்களை விட சிறந்து விளங்க கல்வியை காரணம். தேசிய சராசரி அளவைவிட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம். எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.  இந்தியாவிலேயே சிறந்த கல்விக் கொள்கையை கொண்ட முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.மாணவர்கள் பொறியியல்,  மருத்துவம் ஆகிய படிப்புகளை மட்டும் கனவாக நினைத்து நின்றுவிட வேண்டாம். அதை தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் பெறவேண்டும்.

tn

மாணவர்களின் உயர்கல்விக்காக வழிகாட்டும் நிகழ்ச்சி தான் கல்லூரி கனவு திட்டம். இன்றைக்கு உலகமே மாணவர்களின் விரல் நுனியில் வந்துள்ளது.  இக்காலத்து பிள்ளைகள் மிக மிக விவரமானவர்கள்.  மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை அடைந்து வெற்றி பெற வழிவகை செய்யும் . கல்லூரி கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் " என்று  தெரிவித்துள்ளார்.