நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரிப்பு

 
egg

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு முட்டையின் கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக அதிகரித்துள்ளது. 

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 ரூபாயாக இருந்த முட்டை கொள்முதல் விலையை 4 ரூபாய் 20 காசுகளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு 3 ரூபாய் 90 பைசா கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் முட்டைக்கோழி ஒரு கிலோ 95 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

விலை உயர்வை தொடர்ந்து  சென்னையில் முட்டை விலை 4 ரூபாய் 25 பைசாவாக அதிகரித்துள்ளது.  , பர்வாலா மண்டலத்தில் 4 ரூபாயாகவும்,  பெங்களூர் 4 ரூபாய் 05 பைசாவாகவும், டெல்லியில் 4 ரூபாய் 22 பைசாவாகவும், ஹைதராபாத்தில் 3 ரூபாய் 85 பைசாவாகவும், மும்பையில் 4 ரூபாய் 35 பைசாவாகவும், மைசூர் 4 ரூபாய் 15 பைசாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.