நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் அதிகரிப்பு

 
egg price

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் அதிகரித்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 5 ரூபாய் 20 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில்  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
சென்னை, ஐதராபாத், விஜயவாடா, மைசூரு, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட மண்டலங்களில் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சென்னை மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 60 காசுகளாகவும், ஐதராபாத் மண்டலத்தில் 5 ரூபாய் 15 காசுகளாகவும்,  விஜயவாடா மண்டலத்தில் 5 ரூபாய் 01 காசாகவும், மைசூரு மண்டலத்தில் 5 37 காசுகளாகவும், மும்பை மண்டலத்தில் 5 ரூபாய் 65 காசுகளாகவும், பெங்களூரு மண்டலத்தில் 5 ரூபாய் 35 காசுகளாகவும், கொல்கத்தா மண்டலத்தில் 5 ரூபாய் 75 காசுகளாகவும், டெல்லி மண்டலத்தில் 5 ரூபாய் 24 காசுகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி மற்றும் முட்டை கோழி விலையில் மாற்றமில்லை. கறிக்கோழி கிலோ 131 ரூபாய்க்கும், முட்டைக்கோழி கிலோ 107 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.