நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

 
egg

தேவை அதிகரிப்பால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 

நாட்டின் முட்டை தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய இடமாக நாமக்கள் திகழ்கிறது. நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், நாளுக்கு நாள் முட்டையின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவை அதிகரிப்பால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதன்படி 550 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை  மேலும் 5 காசுகள் உயர்ந்துதுள்ளது. இதனால் 550 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டை விலை 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.