"உலகமே வியந்து பார்க்கும் நம்ம ஊரு திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்" - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

 
tn

தமிழக அரசின் கலை, பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2023  ஜனவரி 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் 13ஆம் தேதி தீவுத்திடலில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.  14ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உணவு திருவிழாவும் நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சியை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்கிறார். 
 
 

tn

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையில் மற்றும் ஒரு முன்னெடுப்பு தான் சென்னை சங்கமம்.  தமிழின தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணையாது காத்திருந்து தற்போது வருகிறது சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா.  தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு சார்பில் நடைபெற இருக்கிறது. வரும் ஜனவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை தீவு திடலில் சென்னை சங்கமம் 2023 நிகழ்ச்சியை நான்  தொடங்கி வைக்கிறேன். 



60ற்கும் மேற்பட்ட இடங்கள் , 60க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் , 600க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்கள் ஒன்றிணைத்து மீண்டும் வருகிறது சென்னை சங்கமம் . பறையாட்டம் ,கரகாட்டம் ,மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறன.  இதோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனி சிறப்பான உணவு வகைகள் உணவு திருவிழாவில் இடம் பெற இருக்கிறது. இலக்கிய திருவிழாவும் நடைபெற உள்ளது.  நம் தமிழ் மண்ணையும், மக்களையும் ,மக்களின் கதைகளையும் பேசும் இந்த கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பெருமிதம் கொள்கிறது.  தமிழர் என்று ஒரு இனமுண்டு;  தனியே அவர்க்கொரு குணம் உண்டு இந்த மாபெரும் மக்கள் திருவிழாவில் அனைவரும் வாருங்கள்;  வாருங்கள் நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.