பரபரப்பு தீர்ப்பு! கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் - 5 பேர் விடுதலை

 
gஒ

 கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டிருக்கிறது.   இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் எட்டாம் தேதி அறிவிக்கப்படும் என்றும் மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

 சேலம் மாவட்டத்தில் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ்.   இவர் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி அன்று கோவிலுக்குச் சென்றபோது கோகுல்ராஜ் மாயமானார்.   இதையடுத்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

க்க்க்

 விசாரணையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் ஆட்கள்தான் கோகுல்ராஜை கடத்தினார்கள் என்பது தெரியவந்தது.   போலீசாருக்கு இந்த விபரம் தெரியவந்த நிலையில்,   நாமக்கல் அடுத்த கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   அவரின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  கொலையில் தொடர்புடைய சங்ககிரி கைதேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ்,  அவரது கூட்டாளிகள் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோஒ

  நாமக்கல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அப்போது கோகுல்ராஜின் தாயார் சித்ரா,   நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்,   இதனால் இந்த வழக்கை வேறு ஊருக்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.   இதையடுத்து இவ்வழக்கை மதுரை வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது.

 இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன்,  அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் உயிர் இழந்து விட்ட நிலையில் யுவராஜ் உட்பட 17 பேர் சிறையில் உள்ளனர்.   வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.    இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்   என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வரும் எட்டாம் தேதி அறிவிக்கப்படும் என்றும் மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறது

இந்த வழக்கில் இருந்து, சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.