#Breaking கட்டாயத் தமிழ்த்தாள் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு!

 
tn

தமிழகத்தில் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

govt

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்மொழி தகுதித் தேர்வு கட்டாயம் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது . அதன்படி குரூப் 1, குரூப் 2 ,குரூப் 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில் முதன்மை எழுத்து தேர்வான கட்டாய தமிழ்மொழித் தாள் தகுதித் தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

tn

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிளுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. TNPSC, TRB, காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து அனைத்து வகை மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது.  40%க்கும் குறைவான குறைபாடுகளை கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசாணை பொருந்தும் .  விலக்கு பெற விரும்புவோர் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்கள் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.