‘உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம்.. நானும், என் மகனும் அண்ணன் தம்பி போல் இருப்போம்’ - ஸ்டாலின் பேச்சு..

 
 ‘உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம்.. நானும், என் மகனும் அண்ணன் தம்பி போல் இருப்போம்’ - ஸ்டாலின் பேச்சு..  ‘உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம்.. நானும், என் மகனும் அண்ணன் தம்பி போல் இருப்போம்’ - ஸ்டாலின் பேச்சு..

சென்னை  அண்ணா நகரில் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிக்ழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

 ‘உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம்.. நானும், என் மகனும் அண்ணன் தம்பி போல் இருப்போம்’ - ஸ்டாலின் பேச்சு..

சென்னையில் ஒவ்வொரு சாலையிலும் 5 வாரங்களுக்கு  ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு,  ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று  இந்த நிகழ்ச்சி அண்ணா நகரில்  காலை 6 மணிக்கு தொடங்கியது.  

 ‘உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி அவசியம்.. நானும், என் மகனும் அண்ணன் தம்பி போல் இருப்போம்’ - ஸ்டாலின் பேச்சு..

தொடர்ந்து  9 மணி வரை நடைபெற்ற  ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொதுமக்களுடன்   கலந்து கொண்டார். அங்கு பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மக்களை உற்சாகப்படுத்திய அவர்,  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது , உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   எனக்கு கொரோனா வந்தபோதும் பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே காரணம் என்று கூறிய அவர்,  எனக்கு 70 வயது ஆகிறது ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பி போல இருப்போம் என்றார்.  ‘சாப்பிடும் முன் பசியோடு அமர வேண்டும். சாப்பிட்ட பின் பசியோடு எழுந்துகொள்ள வேண்டும்’ என்றும்,   உடல்நலத்தை பேணிப் பாதுகாத்தால் கவலைகள், மன சங்கடங்கள் எல்லாம் நம்மைவிட்டு ஓடிவிடும் என்று தெரிவித்தார்.