மெட்ரோ ரயிலில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

 
metro

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,743 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 90 ஆயிரத்து  834 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,062 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில்  403 பேருக்கும், கோவையில்  127 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

இதேபோல் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுஇடங்களில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாநகரப் பேருந்திகளில் முகக்கவசம் அணிந்து பணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போதும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு பயணம் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.