டயர்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து

 
lorry fire

திருவள்ளூர் அருகே டயர்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் ஏரிந்து நாசமாகின. 
 
திருச்சியில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்ஆர்எப் டயர்களை ஏற்றிக் கொண்டு ஜெய்பூர் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சி மணவாளநகர் கேட்டர்பில்லர் கம்பெணி அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது உயரழுத்த மின்சார வயர்கள் உரசி  தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   உயர் அழுத்த மின்சார ஒயர் பட்டதின்  காரணமாக மளமளவென பரவிய தீ. கண்டெய்னர் மற்றும்  ஓட்டுநரின் முன்பகுதியிலும் மளமளவென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுநர் அதிஸ்ட்ட வாசமாக லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த திருவள்ளூர் மற்றும் திருவூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால்  திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் கண்டெய்ணருக்குள் இருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான டயர்களில் 50  லட்சம் மதிப்பிலான டயர்கள் சேதமானது.  தீ விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.