காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை இருமடங்கு உயர்வு

 
kasimedu

மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதாலும், இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் சென்னை காசிமேடு மீன்மார்க்கெட்டில் மீன்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில், மக்கள் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி சென்றனர். 

தமிழகத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்த நாட்களில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டு படகுகள் உள்ளிட்ட சிறிய வகை படகுகளில் மட்டுமே சென்று மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்கள் வரத்து குறைத்து மீன்கள் விலை அதிகரித்து வருகிறது. இதேபோல் காசிமேடு மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்த பட்டு உள்ளதால் 1000 க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள்   வார்ப்பு பகுதியில் நங்கூரம் மிட்டு கடலில் நிறுத்தி வைத்துள்ளனர். 

kasimedu


 
கரைகளில் பைபர் படகுகளில் பிடித்த வரும் மீன்கள்  மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. மீன் பிடித்தடைகாலத்தினால் மீன் வரத்து குறைவினால் வழக்கத்தைவிட இருமடங்காக  மீன்கள் விலை உயர்ந்துள்ளன. பைபர் படகுகள் மூலம் பிடித்து வரும் மீன்களை பிரஷ்ஷாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்களுக்கு பிடித்தமான மீன்களை ஏலத்தில் விலைகொடுத்து வாங்கி எடுத்து சென்றனர்.காசிமேடு மீன்மார்க்கெட்டில் ஒரு கில்ல் வஞ்சிரம் மீன் 1300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கூடை சங்கரா மீன் 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செம்படக்கான் 1 கூடை மீன் 1300 ரூபாய்க்கும், 
கொடுவா மீன் கிலோ 650 ரூபாய்க்கும், பாறை மீன் கிலோ 650 ரூபாய்க்கும், இறால்  கிலோ 450 ரூபாய்க்கும்  மத்தி மீன்  கிலோ 200 ரூபாய்க்கும் ரசினா பர் மீன் கிலோ  400 ரூபாய்க்கு, நண்டு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.