6-வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் தடை

 
okenakal

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து  1.80 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளதால் 6-வது நாளாக இன்றும் அருவிகளில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வினாடிக்கு 1.80 லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளதால் 6-வது நாளாக இன்றும் அருவிகளில்    சுற்றுலா பயணிகள்  குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது . பொதுமக்கள் கால்நடைகளை ஆற்றின் நடுவே அழைத்து செல்லவும்,  மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான அருவிக்கு  செல்லும் நடைபாதையும் மூடப்பட்டுள்ளது. அத்துடன் காவிரி கரையோர பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.