அதிமுகவை முடக்கவே ஓபிஎஸ் தரப்பு முயற்சி - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

 
rb udhayakumar

அதிமுகவை முடக்கவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருவதாகவும்,  அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய வலியுமையான ஒற்றை தலைமையே தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சனை குறித்தும், ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைபாடு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நிர்வாக சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம். கட்சி மற்றும் தொண்டர்களின் நலனுக்காவும், எதிகாலத்திற்காகவும் நான் உட்பட மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லம் தேடி சென்று பேச்சுவார்த்தைக்காக அவரை அனுகினோம். ஆனால், ஒரு தலைவரே பொதுக்குழு நடத்தக்கூடாது என்று சொல்வது எங்கேயும் கேட்டது கிடையாது. காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்த வரலாறை எங்கும் பார்த்தது கிடையாது என்று கூறினார். 

udhayakumar

தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார்,  அதிமுகவை முடக்கவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை எனவும், ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும், ஆனால் அவர் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை காட்டினார் என கூறினார். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை எனவும், அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை, சந்தேக தலைமை வேண்டாம் எனவும் கூறினார்