முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

 
tn

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மகேஷ் என்பவரிடமிருந்து ரூபாய் 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக ஜெயக்குமார் ,மகள் ஜெயப்பிரியா ,மருமகன் நவீன் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிறையிலுள்ள ஜெயக்குமார், கடந்த 25ஆம் தேதி  3வது வழக்காக இதிலும்  கைது செய்யப்பட்டார். 

tn

ஏற்கனவே இரு வழக்குகளில் கைதான நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை எடுத்தனர். ஜெயக்குமாரை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது .ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் மற்றொரு வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் 3ஆவது வழக்கிலும் கைதானது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

tn

இந்நிலையில் ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக ஜெயக்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் மார்ச் 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி  கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.