விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

 
stalin
 

பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி,  சேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படக்கூடிய வேட்டி சேலை திட்டம் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்   தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இதில் கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  தமிழகத்தில்  பொங்கல் பண்டிகையின் போது நியாய விலை கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி,  சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்காக  ரூ. 243 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1. 80 கோடி பெண்களுக்க்கும் 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.   இந்த ஆலோசனையின் போதும் மாவட்ட வாரியாக வைத்து சேலைகள் வழங்குவது மற்றும் திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  குறிப்பாக இதற்கு முன்பாக வழங்கப்பட்ட வேட்டி சேலை போன்ற மாடலில்  இல்லாமல், புதிய  டிசைனில்   மற்றும் தரமான வேட்டி சேலைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  அதற்காக மாதிரி டிசைன் ( சாம்ப்பிள்) வேட்டி சேலைகள் முதலமைச்சரிடம் காண்பிக்கப்பட்டுள்ளது. அது இறுதி செய்யப்படும் பட்சத்தில்,  அதையே இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு வழங்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய பள்ளி,  சீருடைகள் குறித்தும் இதனை தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.