ரூ.100 லட்சம் நிதியில் "சுவைதாளித்தப் பயிர்களுக்கான" மரபணு வங்கி!!

 
govt

நீலகிரி,கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாதுமலை பகுதிகளில் உள்ள தோட்டக்கலை பண்ணைகளில் ரூ.100 லட்சம் நிதியில் "சுவைதாளித்தப் பயிர்களுக்கான" மரபணு வங்கி அமைக்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

nilgiris

சுவைதாளிதப் பயிர்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டும், விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகையான தரமான சுவைதாளிதப் பயிர்களின் நடவுச்செடிகளை விநியோகிக்கும் வகையிலும், சுவைதாளிதப் பயிர்களுக்கான மரபணு வங்கியை உருவாக்கிட  வேளாண்மை -உழவர் நலத் துறை அமைச்சர் கடந்த மார்ச் மாதம்  19ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.முதற்கட்டமாக இவ்வாண்டு மிளகு, சாதிக்காய், கிராம்பு போன்றவற்றிற்கான மரபணு வங்கி நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாதுமலைப்பகுதிகளில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் துவக்கப்பட்டு, உள்ளூர் இரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

kodaikanal

அத்துடன்  மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் வகைகள் மற்றும் இரகங்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்களிலும் , நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம், மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் உள்ள தோட்டக்கலைப் பண்ணைகளில் ரூ.100 இலட்சம் நிதியில் சுவைதாளிதப் பயிர்களுக்கான மரபணு வங்கி அமைக்கப்படும் என்று அறிவித்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.