டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #Gobackmodi ஹேஸ்டேக்

 
go back modi

பிரதமர் மோடி இன்று மாலை தமிழகத்திற்கு வருவுள்ள நிலையில் #Gobackmodi ஹேஸ்டேக்  டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பிரதமர் மோடி இன்று மாலை 5:45 மணிக்கு சென்னை வருகிறார்.  33 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அவர் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும்,  முதல்வர் முக ஸ்டாலினும்  ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.  ரூ.760 கோடி செலவில் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட உள்ள எழும்பூர் இரயில் நிலைய சீரமைப்பு பணி, ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை, தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் மதுரை - தேனி வழித் தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை,  ரூ.450 கோடி செலவில் 90.4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மதுரை - தேனி அகலப்பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி  வைக்கிறார். 

go back modi

இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி #Gobackmodi ஹேஸ்டேக்  டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. வழக்கமாக மோடி தமிழகம் வரும் போதெல்லாம் இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதேபோல் இன்றும் நெட்டிசன்கள் #Gobackmodi ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே  #Gobackmodi ட்ரெண்டிங்கை  கூலிப்படைகள் தான் செய்கின்றது என பாஜகவின் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.  #Gobackmodi ட்ரெண்டை பற்றி பேசிய அவர் அவற்றை  கூலிப்படைகள் தான் செய்கின்றது. கடந்த முறை gobackmodi பாகிஸ்தானில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. மோடியை வரவேற்பு செய்து வழி அனுப்ப 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார்.