தங்கம் வாங்க நல்ல சான்ஸ் - அதிரடியாக குறைந்த விலை

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.4700-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 பைசா குறைந்து ரூ.61.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.61,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்க கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து, ரூ. 4,685 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ.0.50 குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.61க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ  ரூ.61,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.500 குறைந்துள்ளது.