இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! - இன்று குறைந்தது தங்கம் விலை

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.40,760-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இரக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 105 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆகவும், கிராம் வெள்ளி ரூ.74.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.40,760-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,095-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.74.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.