அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக  ரூ.680 உயர்ந்தது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,100க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு  சவரன்  ரூ.40,800க்கும்  விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5100-ல் இருந்து ரூ.5060-ஆக குறைந்து உள்ளது. கிராம் இன்று ரூ.40 குறைந்து இருக்கிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் சரிந்து உள்ளது. கிராம் ரூ.74-ல் இருந்து ரூ.72.70 ஆகவும். கிலோ ரூ.74 ஆயிரத்தில் இருந்து ரூ.72,700 ஆகவும் குறைந்து விற்பனை ஆகிறது.