தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 40,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து 5056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 88 ரூபாய் அதிகரித்து 40,448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து 73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ வெள்ளி விலை 73000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 40,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.112 உயர்ந்து, ரூ.40,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோ கிராம் ஒன்றுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.5,070 ஆக விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.73,100-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 காசுகள் உயர்ந்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.