மீண்டும் அதிகரித்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 37,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் கிராமுக்கு 45 ரூபாயும், சவரனுக்கு 360 ரூபாயும் குறைந்தது. அதாவது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் 45 ரூபாய் குறைந்து,  4,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 80 பைசா குறைந்து, ரூ.60.50 ஆகவும், கிலோவுக்கு 1,800 ரூபாய் சரிந்து, ரூ.60,500 ஆகவும் விற்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 37,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 4,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 60.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 60700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.