இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி - மீண்டும் குறைந்த தங்கம் விலை

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,440 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 38,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.5  உயர்ந்து ரூ.4840-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,440 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.4805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 குறைந்து ரூ.64.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1200 குறைந்து ரூ.64,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.