தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் சவரனுக்கு ரூ.120 குறைந்தது..

 
தங்கம் விலை சரிவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்..  ஆனால் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி  மத்திய அரசு  தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்திய பிறகு  தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது.   எனினும், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நகை விலை சற்று சரிவை சந்தித்து  குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அடுத்த சில நாட்களே மீண்டும் இருமடங்காக  விலையேற்றம் கண்டது.  அதன்படி  கடந்த மாதம் 25ம் தேதி  சவரன்   ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

அதன்பிறகு தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் விலை குறைந்து வந்தது.   அந்தவகையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கும், கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று மேலும் தங்கம் விலை சரிவை சந்தித்து வாடிக்கையாளர்கள் மற்றும் நகைப்பிரியகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதன்படி  இன்று சென்னையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்திருக்கிறது.  இந்த நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,695-க்கும், சவரன்  ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.58-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.58,000-க்கும் விற்பனையாகிறது.