அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 36,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,651 ஆகவும், சவரன், ரூ.37,208 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 36,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 41 ரூபாய் குறைந்து 4,610 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை, மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.60,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,029 ரூபாயாகவும், சவரன்   40,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.