அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து,  37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 20 காசுகள் அதிகரித்து  ரூ.63.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து 63,700- க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்றும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது.  சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமும் ரூ.30 குறைந்து ரூ.4705க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல்  சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 37,640க்கும் விற்பனை ஆகி வருகிறது.  வெள்ளியின் விலையும் குறிந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.0.70 குறைந்து ரூ.63க்கும் கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.63,000க்கு விற்பனை ஆகி வருகிறது.