இல்லத்தரசிகள் அதிர்ச்சி... திடீரென அதிகரித்த தங்கம் விலை

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 38,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாகவே குறைந்து வந்தது. சென்னையில் கடந்த 25-ந்தேதி 38,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 26-ந்தேதி அது 38,560 ரூபாயாக ஆக குறைந்தது. 28ம் தேதி மீண்டும் குறைந்து 38,440 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன் தினமும் அதேவிலையில் நீடித்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரண் 38,160 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 4,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

gold

இந்நிலையில், இன்று நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 38,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 4,790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 10 பைசா உயர்ந்து, ரூ.60.10 ஆகவும், கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.