ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று ஏற்றம் கண்டது. நேற்று முன் தினம் ஒரு சவரன்  ரூ.36,880க்கும், ஒரு கிராம்  ரூ.4,610க்கும் விற்பனை செய்யப்பட்டது.  சவரன் 37 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்ததை அடுத்து, நகைப்பிரியர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய நிலையில்,  நேற்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது.  அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,000-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ. 4,625-க்கும் விற்பனையானது.  அதேபோல் நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள்  குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. 

gold

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 அதிகரித்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி 61,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.