இன்றும் அதிகரித்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில், இந்த வாரத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் 45 ரூபாய் குறைந்து,  4,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 37,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 4,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 37,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ரூபாய் உயர்ந்து 4,705  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 10 பைசா அதிகரித்து, ரூ.61.80 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,100 அதிகரித்து ரூ.61,800 ஆகவும் விற்கப்படுகிறது.