அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 39,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த ஜூலை மாதம் முதல் நாள் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. அன்று முதலே இந்தியாவில் தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. கடந்த 13ம் தேதி சென்னையில் ஒரு சவரண் ஆபரண தங்கம் 39,312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 

அதாவது ஒரு சவரண் ஆபரண தங்கத்தின் விலை 304 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 39,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,914 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 38 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 4,876 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கும் 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம்  63 ரூபாய் 80 பைசாவாகவும், , கிலோவுக்கு  1000 ரூபாய் குறைந்து  63,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.