இன்றும் குறைந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 37,920- ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.  சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,440 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.4805-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 குறைந்து ரூ.64.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1200 குறைந்து ரூ.64,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று மாலையும் விலை குறைந்தது. 

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து,  ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.4740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.64.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.64,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.