சரிவில் தங்கம் விலை.. 2 நாளில் ரூ. 1064 குறைவு..

 
தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக  சரிவை கண்டிருக்கிறது. இந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1064 குறைந்திருக்கிறது.  

தங்கம் விலை  அவ்வப்போது எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து  வருவது வழக்கமான ஒன்றுதான்..  ஆனால் அண்மைக்காலமாக   தங்கம் விலை  அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.   ஒரு நாள்  தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்தடுத்த  நாட்களில்  அதிகளவில் உயர்த்தப்படுகிறது.   ஜூன் மாதம் இறுதியில் தொடர்ந்து சரிவை சந்தித்து சவரன் ரூ. 38 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகி வந்த நிலையில்,  இம்மாத ( ஜூலை)  தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வந்த தங்கம் விலை,  நேற்று  சற்றும் எதிர்பார்க்காத வகையில்  அதிரடியாக  ரூ. 520 குறைந்துள்ளது.  அதன்படி சென்னையில்  நேற்று    ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை  ரூ.4,740-க்கும், ஒரு சவரன்  ரூ.37,920-க்கு விற்பனையானது.  இந்த நிலையில்  இன்று 2வது நாளாக தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 544 குறைந்திருக்கிறது.  கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து ஒரு கிராம்   ரூ.4,672-க்கு விற்பனை ஆகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. ரூ.37,376க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு... சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டி  விற்பனை..

 அதேபோல்  இன்று  சென்னையில்  வெள்ளி விலையும் குறைந்திருக்கிறது.   நேற்று 62 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையான  வெள்ளி இன்று   10 காசுகள்  குறைந்துள்ளது. அதன்படி சில்லறை வர்த்தகத்தில்  ஒரு கிராம் வெள்ளி  ரூ.62.50 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,500-க்கும் விற்கப்படுகிறது.  தங்கம் விலை  நேற்று சவரனுக்கு  ரூ. 520ம்,  இன்று ரூ.544 ம் என   2 நாளில் சவரனுக்கு ரூ.1,064 சரிவை கண்டிருப்பது  நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.