தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை.. இன்றும் சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,352-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

இன்றைய தங்க மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

 தங்கம் விலை எப்போதும்  எதிர்பாரா வகையில்  திடீரென  விலை உயர்வதும், பின்னர் விலை குறைவதுமாக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படும். ஆனால்  அண்மைக்காலமாக , அதிலும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு பிறகு தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்த நிலையில், பின்னர் படிப்படியாக சவரனுக்கு 36 ஆயிரம் வரை குறைந்தது.  அதன்பிறகு ஒரேஅடியாக இல்லாமல்  கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து அதிகரித்து நேற்று 39,000 ரூபாயை தாண்டியது.

வெள்ளி விலை

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்திருக்கிறது.  சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து,  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 39,352  க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.83 உயர்ந்து  4,919 ரூபாய்க்கு விற்பனையாகிறது.   இதேபோல் வெள்ளி விலை 20 காசுகள் அதிகரித்திருக்கிறது. நேற்று 71.30 ரூபாய்க்கு விற்பனையான  ஒரு கிராம் வெள்ளி, இன்று   71.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.