தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. சென்னையில் சவரனுக்கு ரூ.248 உயர்வு..

 
தங்கம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.38,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையானது  தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வந்தது . ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி  ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏற்றம் கண்டவாறே இருந்து வருகிறது. தங்க,ம் விலை குறைவது ரூ.50, ரூ.100 ஆக இருந்தாலும், அதற்கு அடுத்த நாளே ரூ. 200, ரூ.300 என இருமடங்காக  விலை அதிகரித்து விடுகிறது.  இந்த மாத தொடக்கத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை, பின்னர் கொஞ்சம் குறைந்தது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. சென்னையில் சவரனுக்கு ரூ.248 உயர்வு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.4,854-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.73.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது.  இதன் தொடா்ச்சியாக, சென்னையில் கடந்த புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,248-க்கு-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,781-க்கு விற்கபட்டது.  அதற்குள்ளாக நேற்று (வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.37 உயர்ந்து, ரூ.4,831-க்கு விற்பனையானது.  

வெள்ளி விலை

இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,832 -க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.31 அதிகரித்து, ரூ.4,854-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 72.80 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளி விலையும்   கிராமுக்கு  ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ.73.80 ஆகவும்,  ஒரு கிலோ வெள்ளி   ரூ.73,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.