ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து  ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.10  குறைந்து ரூ.4730-க்கு விற்பனை செய்யப்பட்டது .ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.63.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் குறைந்து ரூ.62.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.