தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..

 
gold

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது.  

தங்கம் விலை திடீர் திடீரென எற்ற இறக்கங்களை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும்,  ஆனால் அண்மைக்காலமாக அதாவது உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு  நாள்தோறும் தங்கம் விலையில்  அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.  ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாளே  விலை உயர்வதுமாக இருப்பதால் நகை வாங்குவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  கடந்த ஜூன் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனையானது.  ஆனால் மறுநாளான ஜூன் 2ம் தேதி  ரூ.160 ம்,  ஜூன் 3 ஆம் தேதி 400 ரூபாய் வரையிலும்  ஏற்றம் கண்டது.

gold

பின்னர்  அடுத்தநாளே (ஜூன் 4) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாயும், ஜூன் 5ம் தேதி 200 ரூபாயும் குறைந்து.   தொடர்ச்சியாக நேற்று முன் தினம் 80 ரூபாயும், நேற்றைய தினம்  தங்கம் விலை சவரனுக்கு 200- ரூபாயும்  உயர்ந்து. அதன்படி நேற்று  ஒரு கிராம் ரூ. 4,795க்கும் ஒரு சவரன்  ரூ. 38,360க்கும் விற்பனையானது.  கடந்த சில மாதங்களாகவே இதே போல் விலை அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.  

gold

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்திருகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  8 கிராம் கொண்ட  ஒரு  சவரன் ஆபரணத்தங்கம்  ரூ.38,200-க்கும் விற்கப்படுகிறது. அதேபோல்   சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி  விலை 1 ரூபாய்  குறைந்திருக்கிறது.  ஒரு கிராம் ரூ.67 க்கும்,   ஒரு கிலோ வெள்ளி ரூ.67,000-க்கும் விற்கப்படுகிறது.