இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 40,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளார். 

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.     குறிப்பாக  மார்ச் முதல் வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி,  இல்லத்தரசிகளை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது.  அதன்பிறகு அடுத்த நாள் முதலே தங்கம் விலை குறைந்தது. ஒரு நாள் குறைவதும், மறுநாள் உயர்வதுமாக  கடந்த மாதம் முழுவதும் தங்க விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தது.ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்தும் வரும் தங்கம் இலை இன்று குறைந்துள்ளது.  

gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 குறைந்து 40,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து 5,029  ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து, 75.20 ரூபாயாகவும்,  கட்டி வெள்ளி கிலோவுக்கு .200 ரூபாய் உயர்ந்து .75,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.