தங்கம் வாங்க நல்ல சான்ஸ்! சவரனுக்கு ரூ.760 குறைவு

 
gold

சென்னையில் இன்று  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே தங்க விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. போர் காரணமாக பங்கு சந்தைகள் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்தனர். இதன் காரணமாக தங்கத்தின் தேவையானது அதிகரித்ததால் தங்கத்தின் விலையானது கடும் ஏற்றம் கண்டது. பெரிய அளவில் ஏற்றத்தை காணும் தங்கம் விலை, குறையும் போது ஏறிய அள்விற்கு குறையவில்லை. ஒரு சவரன் 40 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விலை ஏறிய அடுத்த நாளே குறைய ஆரம்பித்தது. இவ்வாறு  தங்கம் விலை ஏற்ற இரக்கங்களை கண்டு வந்த நிலையில்,  நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,835 ரூபாயாகவும், சவரன் 38,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில், சென்னையில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்க 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 95 ரூபாய் குறைந்து, 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 30 பைசா குறைந்து 66.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கட்டி வெள்ளி ஒரு கிலோ 13 ரூபாய் உயர்ந்து 66 000 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.