இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியான செய்தி - தங்கம் விலை குறைந்தது

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 136 அதிகரித்து அதிகரித்து ரூ.37,576க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராம் ரூ.61.50ஆகவும், கிலோ ரூ.61 ஆயிரத்து 500 ஆகவும் விற்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தங்கம் கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து 4,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.62.00ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 62,000 ரூபாய் ஆகவும் விற்கப்படுகிறது.