மக்களே தங்கம் வாங்க நல்ல சான்ஸ்...சவரனுக்கு ரூ.280 குறைவு

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரண் 38,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாகவே குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த 24ம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த நாளான 25-ந்தேதி அதிரடியாக உயர்ந்து 38,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைய தொடங்கியது. 26-ந்தேதி அது 38,560 ரூபாயாக ஆக குறைந்தது. நேற்று முன்தினம் மீண்டும் குறைந்து 38,440 ரூபாய்க்கு  விற்பனையானது. நேற்று அதேவிலையில் நீடித்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரண் 38,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 4,805 ரூபாய்க்கு  விற்பனையானது. இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 4,770 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.60.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.